அம்பேத்கர் அவதூறு பேச்சு..!! அமைச்சர் அமித்ஷாவிற்கு தலைவர்கள் கண்டனம்..!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்றும், நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை :
இதேப்போல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அம்பேத்கர் பிறந்தநாள், நினைவு நாளில் உருவப் படத்துக்கு பாஜகவினர் மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் மக்களவையில் அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி :
அதேபோல் மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, அமித் ஷாவின் பேச்சு பாஜகவின் தலித் எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது. வெறுப்பையும், மதவெறியையும் உள்வாங்கிய ஒரு கட்சியிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்றும், ஜனநாயகத்தின் கோயிலாக திகழும் நாடாளுமன்றத்தில் அமித் ஷா தனது கருத்துகளால் அம்பேத்கரை களங்கப்படுத்தி உள்ளதாகவும், இந்தியாவுக்காக அம்பேத்கரின் பங்களிப்பை முற்றிலும் ஒன்றிய அரசு அழித்து, வரலாற்றையே மாற்றி எழுதிவிடுகார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் :
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம் ஆனால் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமையாக இருக்கும் அவரை உச்சரித்துக்கொண்டே இருப்போம் எனவும் எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்போரை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா :
அதேப்போல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்பேத்கர் மட்டும் பிறந்திருந்தால் பிரதமர் மோடி இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்று கொண்டிருப்பார் என்றும் அமைச்சர் அமித்ஷா ஏதாவது ஒரு ஆலையில் வேலைபார்த்து கொண்டிருப்பார் என்று கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..