சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு வங்கியில் வந்த ரூ.2.5 கோடி! போலீஸ் விசாரணை!
கடலூர் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருபவர் அசோக் குமார். இவர், கனரா வங்கியில் கணக்கு ஒன்றை வைத்துள்ளார். இந்த வங்கிக் கணக்கில், இந்த மாதம் மட்டும், ரூபாய் 2.5 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
10 லட்சம், 20 லட்சம் ரூபாய் என ஒரே மாதத்தில் 2.5 கோடி ரூபாய் வந்துள்ளது. இதனால் சந்தேகம் சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும், துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அசோக் குமாரின் வங்கிக் கணக்கையும் முடக்கியுள்ளனர்.
இதையடுத்து, அசோக் குமாருக்கு எதற்காக பணம் பரிமாறப்பட்டது என்றும், அவருக்கு பணம் வழங்கியவர்கள் யார்? யார்? என்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு பிறகு, கூலிப்படையின் செயல்பாடுகளை காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”