மூன்றும் பெண் குழந்தைகள்… கணவர் வீட்டில் பிரச்சணையால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகர எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. 42 வயதான இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவியும் 3பெண் குழந்தைகளும் உள்ளன.
கேரளாவில் லாரி ஒட்டுநராக வேலை செய்து வரும் பிரபுவிற்கு அவரது மனைவி சுகன்யாவிற்கும் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதன்காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று சுகன்யா தனது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த சுகான்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைதொடர்ந்து சுகான்யாவின் சகோதரர் சுபாஷ் என்பவர் போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் , அவருக்கு மூன்றும் பெண் குழந்தைகள் உள்ளதால் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் பிரச்சனை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகன்யாவின் கணவர் பிரபு மற்றும் அவரது உறவினர்களை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து சீர்காழி அரசு மருத்துவமனை எதிரே திடீர் சாலைமறியலில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் . பின்னர் தற்கொலை இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் போரட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
உறவினர்களின் இந்த போரட்டத்தினால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.