ஆங்கில சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், 2 லட்சம் கோடி ரூபாய் கடனை எப்படி சமாளிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பபட்டது.அதற்கு பதிலளித்த அதானி, நிதி நிலைமை அடிப்படையில் தனது நிறுவனம் வலுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.
அதானி குழுமத்தின் லாப விகிதம், கடந்த 9 ஆண்டுகளில் கடன் விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்து வந்துள்ளதாக விளக்கம் அளித்த அவர், கடன் விகிதம் 7 புள்ளி 6-ல் இருந்து 3 புள்ளி 2 ஆக குறைந்திருப்பதாக கூறினார்.
அதானி குழுமம் பெற்றுள்ள மதிப்பீடு அளவுக்கு, இந்தியாவில் வேறு எந்த வணிகக் குழுமமும் பெறவில்லை என்றும் அதானி தெரிவித்தார்.
9 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது மொத்த கடன்களில் இந்திய வங்கிகளில் இருந்து பெறப்பட்டது 86 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது, இந்திய வங்கிகளில் அதானி குழுமத்திற்கு இருக்கும் கடன் அளவு 32 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.