எல்லாம் முருகனின் அருள் – தொலைந்த பணம் மீண்டும் கிடைத்தது..!
என் பெயர் ஆசைத்தம்பி என் ஊர் திருவள்ளூரை அடுத்த பெரியப்பாளையம், அடுத்த வாரம் சித்திரா பௌர்ணமி என்பதால் என் குடும்பத்துடன், முருகனை காண திருச்செந்தூர் சென்றோம்.
முருகனை தரிசனம் செய்து விட்டு அருகில் இருந்த ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட சென்றோம். என் மனைவி தவறுதலாக 15,000 ரூபாய் பணத்தை அங்கையே வைத்து விட்டால். இதை அறியாமல் நாங்கள் சாப்பிட்டு பணம் செலுத்தி விட்டு புறப்பட்டு விட்டோம்.
காரில் சுமார் 25கிமி வரை வந்து விட்டோம், திடீரென ஒரு மயில் வந்து எங்கள் காரின் முன் உட்கார்ந்து எங்கள போக விடாமல் செய்தது.
நாங்களும் பழம் கொடுத்து பார்க்கிறோம் ஆனால் அது வாங்க மறுத்தது, எங்களுக்கு எதுவும் புரியவில்லை. மீண்டும் எங்கள் காரின் மேல் உள்ள துணி பையை பார்த்து சத்தம் இட்டது. சரி எதோ சொல்ல வருகிறது என நினைத்து, நாங்கள் எடுத்து வந்த பொருட்கள் சரியாக இருக்கிறதா என சரி செய்தோம்.
அப்பொழுது தான் தெரிந்தது, பணப்பை தொலைந்து விட்டது என்று. சிறிது நேரம் யோசித்து, ஹோட்டலுக்கு போன் செய்து கேட்டோம், பணம் அங்கே தான் இருக்கிறது. என்று சொன்னார்கள்.
அவர்கள் பணம் இருக்கிறது என்று சொன்ன அடுத்த நிமிடமே மயில் மறைந்து விட்டது. மீண்டும் ஹோட்டலுக்கு சென்று பணத்தை பெற்றுக்கொண்டு. முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம்.
அந்த பணம் விவாசாயத்தில் நான் சேர்த்த பணம், கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.