மது அருந்த சைடிஸ்.. பக்தர்களிடம் கைவரிசை காட்டிய போதை ஆசாமிகள்.. கையும் களவுமாக..!
முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 55 பக்தர்கள் சாமியை காண திருச்செந்தூர்க்கு வந்த நிலையில், தங்களின் வாகனத்தை பார்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளனர்.
பின்னர் சாமி தரிசனத்திற்கு சென்ற நேரத்தில் 3 திருடர்கள் அந்த வாகனங்களில் ஏறி ரூ 10 பத்தாயிரம் ரொக்கபணம், நொறுக்கு தீனிகள் அடங்கிய நான்கு கைபைக்களை திருடிசென்றுள்ளனர்.
பின்னர் கோவிலின் தெப்பகுளத்தில் அமர்ந்து மது அருந்திய அவர்கள் திருடிய நொருக்கு தீனிகளை சைடிஸாக வைத்து சாப்பிட்டுள்ளனர்.
சாமி தரிசனம் முடிந்து வந்த அவர்கள் பணம் மற்றும் கை பை காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதனை தேடிவந்தனர்.
அப்போது மூவரும் தெப்பகுளத்தில் மது போதையில் கிழே விழுந்து கிடந்தனர். அவர்கள் அருகில் பை இருந்ததை கண்டதும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் பணத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்