நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்கும் AK-62 படம் குறித்தான தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் கதாநாயகி, வில்லன் மற்றும் காமெடியன் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெறும் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதோடு விஜயின் வாரிசு படமும் வெளியாகவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது நடிகர் அஜித் துணிவு படத்தின் வேலைகள் நிறைவடைந்ததால் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார். துணிவு படம் வெளியான பிறகு AK-62 படத்தின் படப்பிடிப்பு வீளையாகும் என்று தகவல் வெளியாகிருந்தது. இதனால் அந்த படத்தின் வேலைகளில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தீவிரமாக இறங்கியுள்ளார்.
தற்போது அந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி AK-62 படத்தின் கதாநாயகியாக நடிக்கவிருந்த த்ரிஷா வேறு படத்தில் இணைந்ததால் அதிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும் மேலும் ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என்று தனது முடிவில் உறுதியாக இருந்து தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்து தற்போது AK-62 படத்தில் காமெடியனாக நடிகர் சந்தானம் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. கூடுதலாக இந்த படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வருவதால் AK-62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து வருகிறது.
Discussion about this post