அஜித் சினிமா துறையில் 32 ஆண்டுகள் நிறைவு..! சிறப்பு போஸ்டர் வெளியிட்ட விடாமுயற்சி படக்குழு..!
நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து விடாமுயற்சி படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் அஜித். பின்னர் 1993 ல் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமான அஜித் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் அஜித் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விடாமுயற்சி படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில், 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறாத ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
-பவானி கார்த்திக்