தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது துருவ நட்சத்திரம், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ‘லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லி இயக்கத்தில், பெயரிடப்படாத புதியப் படத்தில் மீண்டும் வட சென்னை பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் இவருடன் லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.
மகளிர் தினத்தையொட்டி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது.