அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் ஈடுபடும் என அதிமுக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக – பாஜக தலைவர் அண்ணாமலை இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில், ஜெயலலிதா மற்றும் பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு அதிமுகவின்ர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அதிமுக இனி பாஜகவுடன் கூட்டணி்யில் இல்லை என அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுகவின் மூத்தத் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிடோர் டெல்லிக்கு சென்றனர். அங்கு சென்ற அதிமுக குழுவினர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவிடம் தமிழ்நாடு மாநிலத்திற்கு பாஜக தலைவரை புதிதாக நியமிக்க வேண்டும் என்றும், அப்போது தான் கூட்டணி தொடரும்,
மேலும், பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவும் அதிமுக குழுவினர் ஜே.பி நட்டாவிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.