அதிமுக பா.ஜ.க கூட்டணி ஊழலால் உறுதியானது..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கை, வக்பு சட்டம் எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது. அதிமுக இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக தலைமையையும் அமித்ஷா பேச அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தவர், திமுக வையும் திமுக அரசையும், தன்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர் என்பதை மக்கள் அறிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மாநில உரிமை, மொழியுரிமை, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிருக்கும் பாஜக, அதிமுக கூட்டணி என்பது, இது அத்தனைக்கும் எதிரானது.
பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை, தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் பழனிசாமி என்று விமர்சித்துள்ளார்.
இன்றைய அதிமுக பொறுப்பாளர்களது உறவினர் குடும்பங்களைச் சுற்றியும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பாஜக தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்தவர்கள் அதிமுகவை அடமானம் வைத்ததுமட்டுமின்றி தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என்று சாடினார்.
அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்ததே “ஊழல்” தான் என்பதை அனைத்தும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள் என்றும் அதிமுக பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.