வேலூர் ஜெங்குமூர் கிராமத்தில் ஏழு காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் சேதம்..!! வேதனையில் விவசாயிகள்
ஜெங்குமூர் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை குருத்து பப்பாளி மரம் ஆகியவைகளை ஏழு காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்து குண்டலப்பள்ளி, ரங்கம்பேட்டை, ஜங்குமூர், ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வந்து செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது.
அதன் படி நேற்று ஜெகமூர் கிராமத்தில் உள்ள ராஜ்குமார் மற்றும் நரேஷ்பாபு என்பவர்களின் நிலம் அங்கு உள்ளது ராஜ்குமார் அவரது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஏழு காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் நுழைந்து பயிரிடப்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த 1500 வாழை மரங்களில் சுமார் 750 க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் அதிலிருந்து வாழை குழைகளையும் சாப்பிட்டு சேதப்படுத்தி உள்ளது.
மேலும் 10க்கும் மேற்பட்ட தென்னங்குருத்து மரங்களையும், 5 பப்பாளி மரங்களையும் இரண்டு மா மரங்களின் கிளை களையும் உடைத்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து நிலத்தின் உரிமையாளர்கள் வனத்துறைக்கும், வருவாய் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
அதற்குள் 6 காட்டு யானைகள் ஒரு குட்டி யானை மொத்தம் 7 யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் ஏழு யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்களையும், தென்னங்குருத்துகளையும் பப்பள்ளி மரங்களையும் ஆய்வு செய்தனர்.
பின் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற் கொள்வதாக கூறியுள்ளார்கள். இது குறித்து விவசாயிகளும் நில உரிமையாளர்களும் கூறுகையில் காட்டு யானைகள் தொடர்ந்து விளை நிலங்களை இது போன்ற சேதப்படுத்திக் கொண்டே உள்ளது.
இது குறித்து வனத்துறையினர் யானைகள் நிலத்திற்கு வராதவாறு இதுவரை எந்த வித ஒரு நடவடிக்கையும் இழப்பீடும் கொடுக்கவில்லை மேலும் 7 காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதிப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
Discussion about this post