டோனியை தொடர்ந்து அடுத்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை படம்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
கிரிக்கெட் வீரர்களான சச்சின்,டோனி ஆகியோரின் வாழ்க்கையை வைத்து படங்கள் வெளிவந்துள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த இடது கை சுழல்பந்து வீச்சாளரான பல்வங்கர் பாலு வாழ்க்கையையும் படமாக உருவாக உள்ளது. இந்த படத்தை திக்மான்சு ஜூலியா இயக்குகிறார்.
பல்வங்கர் பாலு:
1876ம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தார்வாடில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர் பல்வங்கர் பாலூ. அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தார்.
பாலு புனேவில் உள்ள ஒரு கிரிக்கேட் கிளப்பில் கலந்து கொண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். பல எதிர்ப்புகளுக்கும் போட்டிகளுக்கு மத்தியில் தொடங்கிய தனது கிரிக்கெட் பயணத்தினால் பல அணிகளை வீழ்த்தி இவர் ஆதிக்கம் தொடர்ந்தது.
இத்தகைய வீரரின் சவால் நிறைந்த வாழ்க்கையை தான் படமாக உள்ளனர்.மேலும் இவரின் வாழ்க்கை கதை புத்தகத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதி உள்ளனர்.
ஹீரோ:
கால்பந்து விளையாட்டு வீரர் ஆன சையத் அப்துல் ரஹீம் வாழ்க்கை படத்தில் ஹீரோவாக நடித்த அஜய் தேவ்கன் தான் இந்த படத்தில் பல்வங்கர் பாலு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
-பவானிகார்த்திக்