பழனி இடும்பன் கோயிலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ..?
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 5 கிமி தொலைவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோயில்.பழனி முருகர்
தாய், தந்தையிடம் பழத்திற்காக கோபித்து கொண்டு இங்கே வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
பழனி மழைக்கு அருகே இடும்பன் கோவில் உள்ளது. கடந்த 1996 ம் ஆண்டு இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் 27 ஆண்டுகளுக்கு பிறகு 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கோயில் திருப்பணிகள் தொடங்கியுள்ளன.
மேலும் இக்கோயிலில் விநாயகர், முருகர், கடம்பன், இடும்பன், சிவகிரிநாதன், உமா மகேஸ்வரி, மகாலட்சுமி மற்றும் நவகிரக சன்னதிகளும் அமைந்துள்ளன. இவர்களுக்கு சிறப்பு யாகமும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கோபுரத்திற்கும், அனைத்து சன்னதிகளுக்கும், பாலாலய பூஜையும், தீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரம் கணக்கான பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தற்போது பழனி மலை முருகன் கோயில் “ஆயக்குடி விக்னேஸ்வரா வகையாறா” கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டியது.
-வெ.லோகேஸ்வரி