48 வயதில் பிரபல நடிகைக்கு திருமண ஆசை..!!
1994 ம் ஆண்டு வெளிவந்த “காதலன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் “நக்மா”, தமிழுக்கு வருவதற்கு முன் ஹிந்தியில் பத்திற்கும் மேற்பட்ட படத்திலும், தெலுங்கு படத்திலும் நடித்து இருக்கிறார்.
காதலன் படத்திற்கு பிறகு ரஜினிகாந்திற்கு ஜோடியாக பாட்சா படத்தில் நடிகை நக்மா நடித்த பின் பல ரசிகர்களை கவர்ந்தார். பின் பிரபல முன்னனி நடிகர்களுடன் நடித்தாலும் தெலுங்கு, ஹிந்தி மற்றும் போஜ்பூரி மொழியிலே அதிக படங்களை நடித்துள்ளார்.
தற்போது 48 வயது ஆகியிருக்கும் இவர் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் அவரின் தங்கைகள் ஜோதிகா மற்றும் ரோஷினியின் திருமண வாழ்வை பார்த்து எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
எனக்கும் ஒரு கணவர், குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் இவர் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்..? என்பது பற்றியும் கேட்டுள்ளார்.
நடிகர் சரத்குமார், ஹிந்தி நடிகர் மனோஜ் திவாரி, போஜ்பூர் நடிகர் ரவி கிஷன் மற்றும் கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் என்னை சேர்த்து வைத்து பல காதல் கிசு கிசு எழுந்துள்ளது. இந்த கிசுகிசுவினால் என் வாழ்க்கை இத்தனை ஆண்டுகள் தனிமையில் தள்ளி விட்டது. எனவும் அவர் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..