அண்ணாமலையை மாற்ற சொல்லி நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி முனுசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். பாஜகவுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. நேரம் வரும்போது பாஜக கூட்டணியில் அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல். பாஜக தேசியத் தலைவர்கள் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட்டணிக்கு இனி வாய்ப்பில்லை. அண்ணாமலையை மாற்ற சொல்லி நாங்கள் கோரிக்கையும் வைக்கவில்லை.
அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. அதிமுக கூட்டணிக்கு சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்திலேயே திமுக கூட்டணி கட்சிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் நலன் கருதியே அதிமுக செயல்படும்’ என்று பேசினார்.