மதுரை உசிலம்பட்டியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு காலை உணவுத் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் இன்று முதல் விரிவுபடுத்தப்படுகிறது.
அந்தவகையில், மதுரை உசிலம்பட்டி அருகே சீமானுத்து அரசு தொடக்கப்பள்ளியில், அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடக்கி வைத்தார். இவர் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், திமுக அரசின் ஒரு திட்டத்தை அதிமுக எம்எல்ஏ தொடக்கிவைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.