அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜெயலலிதா காலத்தில் அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்ற அவருக்கு சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் சீனிவாசனுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் நலம் விரைவில் சரியாகும் என்று அப்பல்லோ மருத்துவமனை அலுவலகம் தெரிவித்துள்ளன.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post