பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் நிலைத்த அளவீடு செய்ய வந்த சர்வேரை அதிமுக முன்னாள் கவுன்சிலர் காலணியில் அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அதே பகுதியில் உள்ள சின்னப்புறங்கண்ணியைச் சார்ந்த ராமலிங்கம் . சீதாபதி சரவணன். இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளன.
இந்த நிலையில் நிலத்தின் பேரில் மணிகண்டன் என்பவர் யாருக்கு நிலம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டார் . நீதிமன்றத்தில் அந்த நிலத்தினை அரசு சர்வேயர் மூலம் அளவீடு செய்யும்படி உத்தரவுவிட்டது.
அளந்து நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள சர்வேயர். தாசில்தார் உதவியுடன் காவல் துறை பாதுகாப்புடன் அந்த இடத்தை அளக்க சர்வேயர் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு அழைக்க சென்றனர் அளந்து கொண்டு இருந்த நிலையில் அந்த இடத்தினை சொந்தம் கொண்டாடிய ராமலிங்கம் அதிமுக கவுன்சிலர் சீதாபதி சர்வேயர் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சீதாபதி அவரது காலணியால் சர்வேரைதாக்கினார் அருகில் இருந்த காவல் துறையினர் தடுத்த நிலையில் சர்வேயர் மகேஸ்வரன் இதன் தொடர்பாக கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சி எஸ் ஆர் வழங்கப்பட்டது பின்பு விசாரணையில் யாரெல்லாம் தொடர்பு உடையவர்கள் என்பதை காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ஆராய்ந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் .இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.