பாஜக ஆட்சி ஏற்பட்டதும் பெட்ரோல், டீசல் விலை மறு ஆய்வு செய்யப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி..
ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைந்தால் பெட்ரோல், டீசல் விலை மறு ஆய்வு செய்யப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நடைப்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் மற்றும் வாரிசு அரசியலைத் தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை என குற்றம் சாட்டினார்.
பாஜக ஆட்சி ஏற்பட்டதும் பெட்ரோல், டீசல் விலை மறு ஆய்வு செய்யப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.