தனக்கு நேர்ந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து நடிகை விஜயலெட்சுமி பேசியிருக்கிறார்.
சென்னை 28 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான விஜயலெட்சுமி தொடர்ந்து சில படங்களில் நடித்து சின்னத்திரை பக்கம் வந்தார்.
நாயகி, டும் டும் டும் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். அதன்பின் ஜீ தமிழ் சேனலில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்துடன் 1 கோடி ரூபாய் வென்றார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜயலெட்சுமி அண்மையில் அளித்த பேட்டியில்
‘நடிகர்கள் எதை சொன்னாலும் நடிகைகள் செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் அப்படியில்லை. ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால் அவர் படுக்கைக்கு வருவார் என அவர்களே எண்ணிக் கொள்கிறார்கள். என்னிடமும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். ஆனால், நான் ஏற்கவில்லை’ என்று தனக்கு சினிமாவில் நடந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post