விஜய் தேவரகொண்டாவிற்கு திருமண ஆசை வந்துள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்த்துள்ளார்.
நடிகை சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினை வந்ததால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
சமந்தா விஜய் தேவரகொண்டாவோடு குஷி படத்தில் நடிக்க கமிட் ஆனார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா விஜய் தேவரகொண்டா குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது விஜய் தேவரகொண்டாவிற்கு குஷி படத்திற்கு பிறகு தான் திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வந்துள்ளதாம்.
ஏனெனில் இந்த படம் திருமணம் குறித்த படமாக இருப்பதால் இவருக்கு இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆசை வந்துள்ளது. இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவ இதை பார்த்து நெட்டிசன்ஸ் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.