கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை மேக்னா ராஜ். இவர், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து மேக்னா கர்ப்பமாக இருக்கும்போதே சிரஞ்சீவி மாரடைப்பால் உயிரிழந்தார். கணவரை இழந்த பெரிய துயரத்தையும் தாங்கிக் கொண்டு தன் மகனுடன் மட்டும் வாழ்ந்து வந்தார் மேக்னா.
சிரஞ்சீவியின் மறைவுக்குப் பிறகும் அவர் தன்னுடன் இருப்பதாகவும், தன் மகனாகவே பிறந்துவிட்டதாகவும் மேக்னாராஜ் கூறி வந்தார். தனிமையை மறக்க, மீண்டும் சினிமாவில் நடிர்தது வருகிறார்.
இந்நிலையில், மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் பரவியது. இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சிரஞ்சீவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “எத்தனை ஜென்மம் எடுத்தாலும், எனது கணவர் சிரஞ்சீவி தான். என் வாழ்க்கையில் இனி யாருக்கும் இடமில்லை.”
பலர் திருமணம் செய்து கொள் என்கிறார்கள்,. என் கணவர் எப்போதும் சொல்வது போல, இந்த நிமிடத்தை வாழ வேண்டும் என்பதே எனது தாரகமந்திரம். எனவே என் மகனின் எதிர்காலத்தை மட்டும் நினைத்து நான் வாழ்கிறேன் என்று கூறியுள்ளார்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த மேக்னாவை, மறுமணம் செய்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்று சிரஞ்சீவியின் குடும்பத்தினரே வற்புறுத்துவதாக தெரிகிறது. நடிகை மேக்னாராஜூக்கு 35 வயதுதான் ஆகிறது.