“மீண்டும் உயிருடன் வந்த நடிகர் விவேக்.. கண்கலங்கிய மனைவி..” உரைந்து போன ரசிகர்கள்..!
மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நம்ப சின்ன கலைவாணர் விவேக். அவரை பிடிக்காத மனிதர் இருக்க முடியாது.., 70ஸ் 80ஸ் மற்றும் 90ஸ் களின் காமெடியனாகவும் நடிகனாகவும் நடித்து இருப்பார்.. நடித்த காலத்தில் தன்னுடைய நகைச்சுவை மூலம் பல்வேறு சமூக கருத்துக்களை கூறியிருப்பார்..
நடிகர் விவேக் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்காலமின் தீவிர பக்தர் என்று சொல்லலாம் காரணம் ஏ.பி.ஜே.அப்துல்காலம் அவர்கள் சொன்ன வார்த்தைகளை பின்பற்றியவர் இவர் குறிப்பாக மரம் கன்றுகளை நடுவது.. இவர் மறைந்த பின்னரும் இவரின் கனவுகளை நடிகர் விவேக்கின் ரசிகர்கள் நிறைவேற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல்வேறு நகைச்சுவை மூலம் நம்மை சிரிக்க வைத்து.., சிந்திக்க வைத்த விவேக் அவர்கள்.., கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி காலமானார்..
கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல ஊடகம் நடத்திய விருது வழங்கும் விழாவில் சின்னத்திரை கலைவாணர் விவேக் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.., அவரது சார்பில் விவேக் அவர்களின் மனைவி அருட் செல்வி வாங்கினார்.. அப்போது அவருக்கு ஒரு சப்ரைஸ் ஆக அந்த ஊடகம் AI – Virtual Reality மூலம் மீண்டும் அவரை கொண்டு வந்துள்ளனர் அப்போது அவர் பக்கத்தில் இருப்பதை போல அவரது மனைவி கைகளால் தொட்டு உணர்ந்த தருணம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது..
அப்போது அவர் பேசியதும்.., ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.., அந்த Virtual Reality-ல் அவர் பேசியதாவது.., “என்னமா எப்படி இருக்க..? நம்ப குழந்தைங்க கல்யாணத்தை நல்ல படியா பண்ணி இருக்க நான் பார்த்தன்.. நான் எங்கையும் போல உங்க கூடவே தான் இருக்கேன்..” என அவர் கூறியது அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
2002ம் ஆண்டு ரன் படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதும், 2003ம் ஆண்டு பார்த்திபன் கனவு படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதும், 2007ம் ஆண்டு சிவாஜி படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுகளை வாங்கியுள்ளார்.
அதன் பின் தேசிய விருதுகள், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பலவகை திரைப்பட விருதுகள்., சிறப்பு சான்றாயர் விருது, ஏசியாநெட் திரைப்பட விருதுகள், எடிசன் விருதுகள்., கொடைக்கானல் பண்பலை வானொலி விருதுகள்.., ஜ.டி.எஃப்.ஏ (ITFA) சிறந்த நடிகருக்கான விருது என 100 க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார்.
பத்மஸ்ரீ விருதும் இந்திய அரசு விருதும் நகைச்சுவை நடிகருக்கான விருது மட்டுமின்றி சமூக ஆர்வலருக்கான விருதும் வாங்கியுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ