சந்திரயான் 3 விண்கலம் வெற்றி பெற்றதற்கு தமிழன் தான் காரணம், இதில் பிரதமர் மோடி பெருமை படுவதற்கு ஒன்றும் இல்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ‘கிக்’ திரைப்படத்தின்
செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.இந்த நிகழ்வில் நகைச்சுவை நடிகர் சந்தானம், தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிக்கான், கூல் சுரேஷ், நடிகை தான்யா ஹோப்,மற்றும் பல்வேறு இயக்குனர் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் படத்தின் டீசர் காட்சிபடுத்தப்பட்டது. மேலும் இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்சூர் அலிக்கான் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றி பெற்றதற்கு தமிழன் தான் காரணம். தமிழனுக்குதான் கெத்து. இந்தியா முழுவதும் மோடி பெருமை படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை. கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த மாணவனின் சாதனை சந்திராயன் 3. நீட் தேர்வு எல்லாம் தூக்கி போட்டுவிட்டு எந்த நுழைவும் தேர்வும் இல்லாமல், தமிழ்நாட்டின் பாடநூல் தான் இந்தியா முழுவதும் வைக்க வேண்டும்.
விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, அவருடைய வேலையை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதை விட்டுவிட்டு வீட்டில் சும்மாவா இருக்க முடியும் என்று கூறினார்.அவர் உழைக்கிறார் சம்பாதிக்கிறார், அதில் மக்களுக்கு செலவழிக்கிறார். எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு
விஜய் தற்போது அரசியலுக்கு வந்தால் அவரிடம் பயணிப்பீர்களா என்ற கேள்விக்கு –
பயணிக்கலாம், பயணிக்கலாம் என்று பதில் அளித்தார். லியோவின் ஆடியோ லான்ச் எங்கு நடக்கும் என்று கேட்டதற்கு. சிரித்துக்கொண்டே நிலாவில் நடக்கும் என்று பதில் அளித்தார்.
Discussion about this post