அண்மையில் உதகைக்கு வந்திருந்த ராகுல் காந்தி கேத்தி பகுதியில் உள்ள ஹோம் மேட் சாக்லேட் தொழிற்சாலையை பார்வையிட்ட போது எடுத்த வீடியோவை தற்போது ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
A team of 70 incredible women drives one of Ooty’s famous chocolate factories!
The story of Moddys Chocolates is a remarkable testament to the great potential of India's MSMEs.
Here's what unfolded during my recent visit to the Nilgiris:https://t.co/yNdM37M01M pic.twitter.com/UfPvLryBuC
— Rahul Gandhi (@RahulGandhi) August 27, 2023
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி கடந்த 12-ம் தேதி உதகைக்கு வருகை புரிந்தார். அப்போது தனியார் தங்கும் விடுதியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து உதகை அருகே உள்ள முத்தநாடு மந்து கிராமத்திற்கு சென்று தோடர் இன மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் முறைகளை பார்வையிட்டார்.
இதனிடையே கேத்தி தனியார் தங்கும் விடுதியில் ஹோம்மேட் சாக்லேட் தொழிற்சாலையை பார்வையிட்டும் அங்கு பணிபுரியும் சக ஊழியர்களுடன் தானும் இணைந்து சாக்லேட் தயாரிப்புகளை செய்து மகிழ்ந்தார்.இதனை தற்போது தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ‘ஊட்டியின் புகழ்பெற்ற சாக்லேட் தொழிற்சாலையில் 70 பெண்கள் கொண்ட குழு நடத்தி வருகிறது. மோடிஸ் சாக்லேட்டுகள் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகங்களின் பெரும் ஆற்றலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகும். சமீபத்தில் நீலகிரிக்கு நான் சென்றபோது நடந்தது’ என பதிவிட்டுள்ளார்.