கொருக்குப்பேட்டை ஆர் கே நகர் பகுதியில் உதவி ஆய்வாளரை கஞ்சா போதை சிறுவர்கள் சூழ்ந்து நின்று தாக்கி தப்பி ஓட்டம். முகம் வீக்கத்துடன் இருந்த உதவி ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 4 சிறுவர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இரு சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை ஆர்கே நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாலமுருகன் சாதாரண உடையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த சிறார்களை வழி மறித்து தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த கஞ்சா போதை சிறார்கள் பேசி கொண்டு இருந்த போதே இரு சக்கர வாகனத்திலிருந்து சாவியை பிடுங்கிய மத்தியில் இருந்த உதவி ஆய்வாளர் பால முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் தகாத வார்த்தைகளால் பேசி உதவி ஆய்வாளரை சரமாரியாக சிறார்கள் அக்கம் பக்கத்தினர் வந்தவுடனே கஞ்சா போதை சிறார்கள் தப்பி ஓடினர். பின்னர் தகவல் அறிந்து வந்த ஆர் கே நகர் போலீசார் சம்பவ
இடத்திற்கு சென்று உதவி ஆய்வாளரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர் ஆர் கே நகர் உதவி ஆய்வாளரை கஞ்சா போதை சிறார்கள் அடித்ததில் உதவி ஆய்வாளர் பாலமுருகனின்
முகம் , மூக்கு ,காது, தலை, என பல்வேறு இடங்களில் பலத்த பெருங்காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசாரின் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆர் கே நகர் போலீசார் ஆய்வு மேற்கொண்ட வருகின்றனர். மேலும் 6 சிறார்களில்
4 சிறார்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் 2 சிறார்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.