விதிகளை மீறும் சாயப்பட்டறை ஆலைகள் மீது நடவடிக்கை..!! அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை..!!
தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 21-ம் தேதி நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர்.
இதனையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சட்டப்பேரவை கூடவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. அப்போது சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வட்டங்கள் பிரிப்பதற்கான கோரிக்கை, பேரவையில் பல உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், பவானி ஆற்றங்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கண்காணிக்க சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப்பட்டிருப்பதால் விதிகளை மீறும் ஆலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.