“சாதனையாளர் சீமான்..” பெண்களை இப்படி பேசலாமா..? மருத்துவர் கேள்வி…?
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் வழக்கில், உயர்நீதி மன்றம் விசாரணை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த நடிகை 5 முறை கருகலைக்கப்பட்டதாகவும், இதற்கு மேல் நீதிக்கேட்டு போராடினாலும் நீதி கிடைக்கப்போவதில்லை எனக்கூறி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து மனநல மருத்துவர் ஷாலினியை நம் மதிமுகம் தொடர்பு கொண்டு, சில கருத்துக்களை கேட்டறிந்தோம். அப்போது அவர் கூறிய பதில், நடிகை பாலியல் புகார் விவகாரத்தில் சீமான், நடிகை குறித்து தெரிவித்த கருத்துக்கள் என்பது தமிழகத்திற்கு நிகழ்ந்த கலாச்சார ரீதியான மிகவும் மோசமான பின்னடைவாக நான் கருதுகிறேன் என கூறினார்.
மேலும் பேசிய அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர், ஒரு பெண் குறித்து இப்படி பேசுவது தமிழ்நாட்டிற்கு அவமரியாதை விளைவிப்பதாகவும், தமிழர் ஒருவர் ஒரு பெண்ணை குறித்து பேசக்கூடாத வார்த்தைகளை பேசுகிறார். சாதாரண நபர் அல்லது தெருக் கோடியில் இருக்கும் நபர் என்றால் அவர் பேசுவதை நாம் புறக்கணிக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் தலைவரே இப்படி பேசுகிறார் என்றபோது இதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஒரு ஆணும் பெண்ணும் உறவு வைத்துக்கொள்வது என்பது இயல்பான ஒன்று தான். எல்லா ஆண்களும், பெண்களும் உறவு வைத்துக் கொள்ளத் தான் முயற்சி செய்கிறார்கள். இயற்கையின் உந்துதல் அது. ஆனால் அதற்கான சம்மதம் எப்படி வாங்குகிறோம் என்பது முக்கியம். நீயும், நானும் சேர்ந்து இருப்போம். பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் ஆக. ஆனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். உனக்கும் சந்தோஷம், எனக்கும் சந்தோஷம் என்று சொல்லி விட்டால் முடிந்து விட்டது. அதை குறித்து கேட்பதற்கு அந்த பெண்ணிற்கும் உரிமை இல்லை.
ஆனால் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒருவருக்கு நம்பிக்கை கொடுத்து விட்ட பிறகு, நான் உன்னைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் அதனால் உறவில் ஈடுபடலாம் என்று அந்த பெண்ணை ஆசைகாட்டி சம்மதம் வாங்கிவிட்ட பிறகு, அதெல்லாம் கிடையாது நீ பாலியல் தொழிலாளி என்று சொல்லி விட்டார் என்றால் சீமான் எத்தனை அநியாயங்கள் செய்கிறார் என்பதை அவருடைய செயலே காட்டுகிறது.
முதலில் சம்மதம் பெற்றதே பொய் சொல்லித் தான் அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார். அதன் பின்னர் அவர் மீது அவதூறு பரப்பி, உனக்கு எந்த உரிமையும் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.
தனக்கு சாதகமாக பேசும் சீமான் :
நடிகை பாலியல் விவகாரத்தில் செய்தியாளர்களிடம் பேசும் சீமான் தனக்கு சாதகமான விஷயங்களை மட்டுமே பேசுகிறார். ஒரு ஆண் எப்போதும் கர்ப்பமாக போவது இல்லை. ஆனால் ஒரு பெண் கர்ப்பமாக கூடும். ஒரு ஆண் தான் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முடியும். ஒரு பெண்ணை 7 முறை கருக்கலைப்பு செய்ய வைத்த சாதனையாளர் தான் சீமான்.
அந்த கருவுனுடைய பாவத்திற்கு சீமான் ஆளாகி விட்டார். அவர் எவ்வளவு பெரிய பாவி என்று சொல்வார்கள். அதை ஒருவர் பெருமையாக நினைக்கிறார் என்றால் அதை என்ன சொல்வதென்று மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். அவர் கொஞ்சம் சரி இல்லாதவர் என்று நாம் எப்போதிலிருந்து சொல்லிக் கொண்டு இருக்கிறோம் ஆனால் அதற்கான முடிவுகளை எடுக்கவில்லை.
வழக்கு மட்டும் இன்றி சமூக ரீதியாகவும் சீமான் பெண்களை மோசமாக பேசுவதாக மகளிர் அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆணை பாதுகாப்பது முக்கியம். ஆனால் பெண்ணை பணயம் வைத்து ஆணை காப்பாற்றுவது சரிபட்டு வராது
என்னை கேள்வி கேட்க யார் யோக்கியர்கள் உள்ளனர் என சீமான் கேட்கிறார். ஏன் யாருமே யோக்கியர்கள் இல்லையா..? அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்களா..? எல்லோரும் தன்னைப்போன்றே மோசமானவர்களாக இருப்பார்கள் என்று அவர் நினைத்து கொண்டுள்ளார் என்றால் அது அவருடைய நோய். என இவ்வாறே விமர்சித்து பேசியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..