ADVERTISEMENT
ஆவின் நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஆவின் டிலைட் பால் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3.5 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட ஆவின் டிலைட் பால் அட்டை மூலம் வழங்கப்பட உள்ள நிலையில், அரை லிட்டர் ஆவின் விலை பால் ரூபாய் 21 விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், டிலைட் பால் அறிமுகப்படுத்தியதின் மூலம் மறைமுக விலை ஏற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.
ஆதரமற்ற உள்நோக்கம் கொண்டு சிலர் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக தெரிவித்த அவர், ஆவின் நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.