ஆடி பெருக்கு வழிபாடு..! நீர்நிலைகளில் குவிந்த மக்கள்..!
நாமக்கல் மாவட்டம் :
நாமக்கல் பரமத்திவேலூர் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆடி 18 பண்டிகை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம் பொதுமக்கள் புதுமண தம்பதிகள் அதிகாலையில் காவிரி ஆற்றில் நீராடி காவிரி தாயை வணங்கி மணலில் கன்னிமார் தெய்வங்களை அமைத்து படையல் இட்டு மஞ்சள் கயிறுகளை வைத்து சாமி கும்பிடுவது வழக்கம். இந்த முறை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர் உமா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் மீன்பிடிக்கவோ பரிசில் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இன்று ஆடி 18 பண்டிகையை ஒட்டி காவிரி ஆற்றில் நீராட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட்டனர் அருகில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் குழாய்களில் நீராடி செல்கின்றனர். காவிரியாற்றின் விடுவதற்காக நவ நவதானியங்கள் மற்றும் முளைப்பாறிகளை எடுத்து வந்த பொதுமக்கள் ஆற்றுப் பாலத்தில் இருந்து காவிரி ஆற்றுக்குள் கொட்டி விட்டு காவிரி தாயை வணங்கி சென்றனர்.
கரூர் மாவட்டம் :
மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் காவிரியில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு காவிரியில் நீர் வரத்து அதிகரித்து தற்போது 1 லட்சத்தி 67,156 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மாயனூர் காவிரி கதவணையில் உள்ள 100 மதகுகளில் 98 மதகுகள் வழியாக காவிரியில் 1 லட்சத்தி 65,636 கனஅடியும், தென்கரை வாய்க்காலில் 700 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் கிளை வாய்க்காலில் 20 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.காவிரி மற்றும் கிளை வாய்க்காலில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் கழுகு பார்வை காட்சி பிரத்தேக வீடியோ.வெளியாகியுள்ளது .
தருமபுரி மாவட்டம் :
வருடம்தோறும் ஆடிபெருக்கு விழா சுற்றுலா துறை சார்பில் ஒகேனக்கல்லில் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.. இதே போல் இன்று ஒகேனக்கல்லில் ஆடிபெருக்கு விழா தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் தமிழக வேளான்மை துறை அமைச்சர் பங்கேற்று 367 நபர்களுக்கு 8 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னதாக அரசு சார்பில் பல்துறை விளக்க கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார் செய்தி விளம்பரத்துறை, வனத்துறை, வேளான் துறை, சுகாதார துறை, உள்ளிட்ட அரங்குகளை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பின்னர் மலைகிராம மக்கள் பயன்பெரும் வகையில் கூட்டுறவுதுறை சார்பில் வாகனம் மூலம் பொருட்கள் விற்பனையை துவக்கிவைத்தார் மேலும் இவ்விழாவில் கலை பண்பாட்டுதுறையினரின் நடனம்நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் திரு, ஆ.மணி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இணைந்து கடந்த ஜூன் மாதம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர் அதனை தொடர்ந்து நேபாலில் நடைபெற்ற ஆசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வாகி இந்தியா , பங்களாதேஷ், இலங்கை, நேபால், பூடான் உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொண்ட கைப்பந்து போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் திருப்பூரைசேர்ந்த மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். இதனைத் தொடர்ந்து பதக்கத்துடன் திருப்பூர் திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் வைத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டம், கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் சென்னையில் உள்ள வி ஐ டி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் இவர் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் தனது அக்கா பட்டம் பெறுவதை பார்ப்பதற்காக தாய் தந்தையுடன் ரயில் மூலம் காட்பாடி வந்துள்ளார் அப்பொழுது காட்பாடி ரயில்வே நிலையம் ரயில் வந்து நிற்கும்போது ஆகாஷ் தூங்கி விட்டதாகவும் ரயில் புறப்படும் போது ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த போது ரயிலின் சக்கரத்தில் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தனது அக்கா கல்லூரியில் பட்டம் பெறுவதை பார்ப்பதற்காக தாய் தந்தையருடன் வந்த தம்பி ரயில் சக்கரத்தில் மாட்டி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலை அடுத்த கோவிலூர் பகுதியில் நேற்று காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது அதனைத் தொடர்ந்து கிளானூர் பகுதியில் சுற்றி திரிந்தது.இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ செய்துள்ளனர் மேலும் இது குறித்து விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கவும், இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் அதை தொடர்ந்து திருப்பத்தூர் வனத்துறையினர் ஒற்றைக் கொம்பன் காட்டு யானை ஊருக்குள் வராமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் :
திருவண்ணாமலை செங்கம் அருகே ஆண்டுதோறும் தங்களது குலதெய்வ மான நீப்பத்துறை சென்னியம்மனின் ஆடிப்பெருக்கு விழாவிற்கு ஏராளமான கிராம மக்கள் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சென்று குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது வழக்கம். புதுப்பட்டு பகுதியிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு ஒரு நாளைக்கு முன்பே ஊர்வலமாக உறவினர்களை அழைத்துச் சென்று,தங்கள் குடும்பத்தில் புதிதாக திருமணம் செய்த புது மண தம்பதிகளுக்கு தாலி மாற்றி கட்டவும், குழந்தைகளுக்கு காது குத்தவும், தென் பெண்ணை ஆற்றில் நீராடி சென்னியம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் ஆடு கோழிகளுடன் அனைத்து உறவுகளையும் பாரம்பரிய முறைப்படி கிராம பண்பாட்டுடன் அழைத்துக் கொண்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தெய்வீக இசையுடன் பாரம்பரியமாக கோயிலுக்கு பூரணமாக சென்று வழிபட்டனர். இந்நிகழ்வு காம்போரை மகிழ்ச்சி மற்றும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருந்தது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..