ஆவின் தொழிற்சாலையில் இளம் பெண் உயிரிழப்பு..! போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம்..!
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமா ராணியின் புடவை முந்தானை எதிர்பாரதவிதமாக இயந்திரம் அருகில் இருந்த மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவறிந்து வந்த காவல்துறையினர், டிஎஸ்பி கந்தன் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன்., ஆகியோர் உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்த உமாராணி உயிரிழந்ததை குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ”25 ஆண்டுகளாக இயங்கிவந்த இயந்திரத்தில் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. மோட்டார் கன்வேயர் பெல்டில் பெண் ஊழியரின் புடவை முந்தானை சிக்கியதே இந்த விபத்துக்கு காரணம்.
இதுமாதிரியான அசம்பாவிதங்களை தடுக்க இனி கோட் போன்ற உடையை அணிவது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. மேலும் உயிரிழந்த பெண்ணிற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசியுள்தாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஆவின் பால் பண்ணை பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றிய மேற்பார்வையாளர் வருண்குமார் என்பவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்