தந்தை பெரியாரின் 50-வது நினைவு தினத்தையொட்டி உருவப்படத்திற்கு மரியாதை
தந்தை பெரியாரின் 50-வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திமுக, மதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் 50 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதிமுக சார்பில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, அரை நூற்றாண்டு கடந்த பின்னும், தந்தை பெரியார் இந்த மண்ணுக்கு தேவைப்படுவதாக தெரிவித்தார்.
அதேபோல், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முத்தரசன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்ட பெரியார் திருவுருவப் படத்திற்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர் அரிமா நாகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், மதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல், புதுக்கோட்டையில் மதிமுக சார்பில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
கரூர் மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளையொட்டி ராயனூரில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.