கட்டிட வேலையில் ஈடுப்பட்ட பெண்.. 3 -வது மாடியில் இருந்து விழுந்த பரிதாபம்..!
ஆவடி பட்டாபிராம் ஐடி பார்க் கட்டிட பணியில் திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (50) என்பவர் சித்தாள் வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை 3-வது மாடியின் சுவரில் துளையை அடைத்து கொண்டு இருந்துள்ளார் வளர்மதி. அப்பொழுது எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், எச்சரிக்கையும் இல்லாமல் இருந்த லிஃப்ட்காக போடப்பட்ட கதவு திறந்து கொண்டதால் 3-வது மாடியில் இருந்து வளர்மதி தவறி கீழே விழுந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரடிய அப்பெண்ணை விழுந்து நீண்ட நேரம் கழித்து கம்பெனி வாகனத்தில் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வளர்மதி வரும் வழியிழேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உடலை கைப்பற்றிய பட்டாபிராம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்