கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் பரபரப்பு…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது . வனவிலங்கான காட்டெருமை தற்போது அதிக அளவில் நகர் பகுதியில் உலா வருகிறது.
உலா வரும் காட்டெருமை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என பலரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர் . இந்த நிலையில் இன்று கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்தது, இதனால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர்.
காட்டெருமை கூட்டம் அந்தப் பகுதியில் உலாவியதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பெரும் சிரமம் அடைந்தனர். எனவே வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகும் காட்டெருமை கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.