2.70 கோடி மதிப்பீட்டில் புதிய வேளாண் விரிவாக்கமைய கட்டிடம் முதலமைச்சர் காணொளி வாயிலாக திறப்பு..!
அரியலூர் மாவட்டத்தில் 2.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தினை முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வாலாஜா நகரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் குத்து விளக்கேற்றினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சி தலைவர் ஆனிமேரிஸ்வர்ணா தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர், போக்குவரத்து துறைஅமைச்சர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கமைய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 104 பவர்டில்லர்கள் 88.40 இலட்சம் மதிப்பீட்டிலும், 04 பவர்வீடர்கள் 1.44 இலட்சம் மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 108 விவசாயிகளுக்கு 89.84 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post