முறையான உரிமம் இல்லாமல், சுகாதாரமற்ற முறையில் மயிலாடுதுறையில் தயாரிக்கப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ் கிரீம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஜிவான் அலி மற்றும் பதுருல் உசேன் ஆகியோர் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு தெருவில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் குல்பி ஐஸ் தயாரிக்கும் இடத்தில் சென்று விசாரணை மேற்கொண்டனர்நகராட்சி அனுமதி பெறாமல்சுகாதாரமற்றமுறையில் தயாரிக்கப்பட்ட ஒரு டன் ஐஸ்கிரீமை மயிலாடுதுறை நகராட்சி நகர் நல அலுவலர் லட்சுமி நாராயணன் சுகாதார ஆய்வாளர்கள் ராமையண், ரவி உட்பட அதிகாரிகள் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள குல்பி ஐஸை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குல்பி கொட்டி அழிக்கப்பட்டது. நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று ஐஸ்கிரீம் தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.

















