அலுவலகத்தில் புகுந்த பாம்பு..!! ஓட்டம் பிடித்த ஊழியர்கள்..!! பரபரப்பான திருப்பத்தூர்..!!
வாணியம்பாடி ரயில்வே கேட் கேபினில் திடீரென 10 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்த ரயில்வே பெண் ஊழியர்சிக்னல் விழுந்தும் கேட் திறக்கப்படாமல் இருந்ததால் பதப்பதைத்த வாகன ஓட்டிகள் கேபினுக்குள் அடிக்கடி பாம்புகள் நுழைவதாக ரயில்வே மேலாளருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை பெண் கேட்மேன் வேதனை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட்(எல்.சி.81) பகுதியில் உள்ள கேபினில் திடீரென 10 அடி நீளமுள்ள பாம்பு புகுந்ததால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பெண் ஊழியர் (கேட் மேன்) சுபாஷினி என்பவர் அலறியடித்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்துள்ளார் ரயில் வருவதாக மூடப்பட்ட கேட் (மஞ்சள் )சிக்னல் விழுந்தும் கேட் திறக்கப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கக் கூடிய சூழல் நிலவி கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் தகவல் அறிந்து அங்கிருந்த சிலர் உதவியுடன் கேபினுக்குள் சென்ற பெண் ஊழியர் கேட் திறந்து விடப்பட்டது. இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பான சூழல்
நிலவிய நிலையில் நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் அமைந்துள்ள கேபின் சுற்றிலும் முட்புதர்களாக உள்ளதால் பலமுறை பாம்புகள் அடிக்கடி கேபினுக்குள் வந்து விடுவதாக ரயில்வே மேலாளருக்கு கேட்மேன் தகவல் அளித்தும் கண்டுகொள்ளவில்லை எனவும் எப்போதும் அச்சத்துடன் பணி செய்யக்கூடிய சூழல் நிலவி வருவதாக ரயில்வே பெண் ஊழியர் வேதனை தெரிவிக்கின்றார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..