பிக் பாஸ் சௌந்தர்யா சொன்ன கதை..!! கண் கலங்கிய ரசிகர்கள்..!!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் போட்டியளராக பங்கேற்றுள்ள சௌந்தர்யா அவருடைய காதல் கதையை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
எப்பவும் சிரித்த முகத்துடன் எந்த கவலையும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வரும் சௌந்தர்யாவிற்கு பின்னால் இப்படி ஒரு சோக கதை இருக்கிறதா..? என அவர் மனம் திறந்து பேசிய பின்பே பலருக்கும் தெரியும்..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சௌந்தர்யா பற்றி ஒரு சிறு தொகுப்பு :
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்கள் சண்டை போட்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஆனால் ஒரு சில போட்டிகள் எந்த வம்புக்கும் போகாமல் இருந்த இடம் தெரியாமல் அமைதியாக இருந்து விட்டு போய்விட வேண்டும் என்ற சிந்தனையோடு வருகிறார்கள்.
அந்த வரிசையில் எட்டாவது சீசனிலும் ஒரு போட்டியாளராக சௌந்தர்யா அறிமுகமாகி இருக்கிறார்.
முதல் நாள் விஜய் சேதுபதியின் முன்பு தன்னை பற்றி அறிமுகம் செய்யும்போது நான் மாடலாக இருக்கிறேன் ஆனால் என்னுடைய குரலுக்காக நான் பல இடங்களில் அவமானம் சந்தித்திருக்கிறேன். அதற்காக நான் மிமிக்ரி செய்வது போன்று தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று அவருடைய வேதனையை பற்றி பேசி இருந்தார்.
அதற்கு விஜய் சேதுபதி உங்களுடைய நிஜ குரலே அருமையாக இருக்கிறது என்று அவரை பாராட்டி நிகழ்ச்சிக்கு அனுப்பி இருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்குள் சென்றதுமே தர்ஷிகா அவரிடம் பொம்பள வாய்ஸில் பேசு என்ன குரல் இது என்று கேட்டது பெரும் விமர்சனத்தை சந்தித்தது.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அவர் சந்தித்த அவமானம் இத்தனை வருடங்களாக அவர் வெளியிலே எவ்வளவு சந்தித்திருப்பார் என்பதை காட்டியது. இந்த சீசனில் சௌந்தர்யாவுக்கு தான் அதிகமான ஃபேன்ஸ் பேஜ் தொடங்கப்பட்டிருக்கிறது.
அதோடு இரண்டு வார நாமினேஷனில் இவர் இருந்தாலும்., இவர்தான் அதிகமான வாக்குகள் பெற்றுக் கொண்டிருக்கிறார். இப்பொழுது சௌந்தர்யாவின் காதல் கதை பற்றி ஒரு சிறு பதிவு..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அதில் சௌந்தர்யா தான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு நபரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். முதலில் பார்த்ததும் பிடித்து விட்டது. அதனால் அந்த காதல் கல்லூரி வரைக்கும் தொடர்ந்து வந்தது. ஆனால் நான் வெளியே செல்வது நான் காதலித்த அந்த நபருக்கு சுத்தமா பிடிக்காது.வேறு யாரோடும் பேசக்கூடாது என்று சொல்வார்.
கல்லூரி படிக்கும் நேரத்தில் நான் மாடலிங் பண்ணுறது அவருக்கு சுத்தமா பிடிக்கல. ஒரு நாள் அவருக்கு தெரியாமல் நான் ஒரு மாடலிங் போட்டோ சூட் எடுத்து இருந்தேன். அந்த புகைப்படங்களை என்னுடைய ஃபோனில் ஹைப் பண்ணி வைத்திருந்தேன். அதை ஒரு முறை அவர் பார்த்துவிட்டார். நடு ரோட்டில் வைத்து என்னை அடித்தாக சொல்லப்படுகிறது.
அதற்குப் பிறகும் நான் அவரிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன் ஆனால் போட்டோ சூட் எடுத்ததற்காக என்னை நடுத்தெருவில் வைத்து அடித்த பிறகு தான் இனி இவர் நம்மளுக்கு தேவை இல்லை என்று விலகி விட்டேன். எனக்கு என்னுடைய கேரியர் முக்கியம் என்று முடிவெடுத்தேன் என்று அழுதப்படியே சொல்லி இருக்கிறார்.
இந்த காதல் கதையை கேட்டு சௌந்தர்யாவின் ரசிர்கள் பல்வேறு கருத்துகளை சமுக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்..
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..