கச்சத்தீவை மீட்க கோரி தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்..!!
கச்சத்தீவை மீட்க கோரி முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றபட்டது.
கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக சட்டசபையில் முன்மொழிந்தார். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிறது என்பதை சுட்டிக்காட்டி கச்சத்தீவை மீட்பதை தவிர வேறு வழியில்லை என்பதை அழுத்தமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை பிரதமர் மோடி மீட்டு அழைத்து வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலமாக முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.