அழகான கூந்தலுக்கு ஒரு ரகசியம் சொல்லுறன்..!!
சொறி சிரங்கு : வெந்நீரில் வேம்பு இலையை போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை எடுத்து
தலைக்கு குளித்தால் சொறி, சிரங்கு, ஒவ்வாமை, மற்றும் அலர்ஜி போன்ற வைகள் நீங்கும்.
கற்றாழை ஜெல் : முடி மென்மையாக இருக்க, கற்றாழை ஜெல்லுடன் சிறிது அளவு தேங்காய் எண்ணெய் கலந்து, அதை தலை முடியின் வேர்ப்பகுதி வரை தடவ வேண்டும். பின் 30 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.
இப்படி வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் கரடு முரடான முடியும். மென்மையாக மாறிவிடும்.
பொடுகு பிரச்சனை : ஆவாரம் பூவின் பொடி, வெந்தயப் பொடி, மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் ஒரே அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் இதை தலை முழுவதும் தடவி ஊறவைக்க வேண்டும்.

30 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு தலை முடியை அலசிவிடவும். வாரத்திற்கு இருமுறை என மூன்று மாதங்கள் இவ்வாறு செய்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும்.
உடல் சூடு : ஒரு 2 மணி நேரம் வெந்தயத்தை ஊற வைத்து கொள்ளவும், ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து அதை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலையை அலசினால் உடல் சூடு குறையும்.
மேலும் இதுபோன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி