ரோந்து பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் திடீரென உயிரிழப்பு..!
சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சரவணன் ( வயது 51), நேற்று இரவு பணி முடிந்ததும் வழக்கம் போல ரோந்து பணிக்கு சென்று காவலில் இருந்துள்ளார்.. அதன் பின் உடன் இருந்த காவலர்களிடம்., எனக்கு சற்று உடம்பு சாரியில் நான் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்து விட்டு காலையில் வருகிறேன் என கூறியுள்ளார்..
அதன் வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.. இதனால் பரிதவித்த குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்..
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.., 2 மணி நேரத்திற்கு முன் ரோந்து பணியில் இருந்த காவலர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..