ஒரு பிரைட் ரைஸ் பார்சல்..! காசு வேணாம் ஓட்டு தான் வேணும்..!!
தமிழ்நாட்டில் தேர்தல் களம் எந்த அளவிற்கு சூடு பிடித்துள்ளதோ அதே அளவிற்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் அதிமுக வேட்பாளருக்கு வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் தெலுங்கில் பிரச்சாரம் செய்து ஓட்டு கேட்டார்.
முந்தைய காலத்தில் எல்லாம் மக்களிடம் வீடு வீடாக சென்று வயதானவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கதனர்.., இப்போது ஒரு சிலர் செய்தாலும் ட்ரெண்டிங் முறையில் வாக்கு சேகரிக்கும் விதமாக டீ போட்டு, தோசை ஊற்றி, மடிப்பிச்சை எடுத்து வாக்கு சேகரிப்பில் வேட்பளார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் வரிசையில் இன்று சென்னை கொருக்குப்பேட்டை சிகரெந்த பாளையம் காமராஜர் நகர் ஜே.ஜே. நகர் சுண்ணாம்பு கால்வாய், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 18 ஆவது பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு “வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ” மற்றும் வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் தேர்தல் பொறுப்பாளருமான ராஜேஷ் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ராயபுரம் மனோ ஃபாஸ்ட் ஃபுட் கடையில் பொதுமக்களுக்கு ப்ரைட் ரைஸ் போட்டு பார்சல் செய்து கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார் இதனைத் தொடர்ந்து தெலுங்கர் வகுப்பை சேர்ந்த பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் அவர்கள் தெலுங்கில் பேசி வேட்பாளர் ராயபுரம் மனுவுக்கு வாக்கு சேகரித்தார்.
கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுகவினர் கைதட்டி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். மேலும் வேட்பாளர் சென்ற இடமெல்லாம் பட்டாசு வெடிக்கப்பட்டு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் வேட்பாளருக்கு மாலை சால்வை ஆரத்தி எடுக்கப்பட்டது இந்நிகழ்வில் பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..