திருப்பூரில் ஒன்றரை வயது குழந்தை உயிர் இழப்பு..! பின்னணியில் காத்திருந்த அதிர்ச்சி..!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாபி – பிரியா (எ) நித்யா தம்பதியினர் இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பிரகல்யா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் வேலை தேடி திருப்பூர் வந்துள்ளனர். பின் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பாபி டெய்லராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பிரகல்யாவை திடிரெனே காணவில்லை. பின் பாபி மற்றும் பிரியா குழந்தையை பல இடங்களில் தேடி உள்ளனர். பின் வீட்டின் பின்பக்கம் உள்ள பாத்ரூமில் பாதி அளவு தண்ணீர் உள்ள பக்கெட்டில் குழந்தை கிடந்துள்ளது. அதனைக் கண்ட பிரகல்யாவின் தாய் பிரியா உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின் அங்கிருந்து குழந்தை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அனுப்பர் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி மர்மமான முறையில் உயிர் இழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ