வடகிழக்கு பருவ மழை தொடங்கிய முதல் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அதிக பட்சமாக சீர்காழியில் 44 செ.மீ பெய்து வெள்ளபெருக்கு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மாயம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 18ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றார். மேலும் நாளை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளிலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இதனால் மணிக்கு 65கி.மீ. வேகத்தில் புயல் வீசும் என்றும் அறிவித்துள்ளது.
இதனால் மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தபட்டுள்ளது. நாளை தென்கிழக்கு வங்கக் கடல் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று வரை வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 17 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதகவும் நேற்று நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.