கால்பந்து வீராங்கனை பிரியா கடந்த சில காலமாக கால்வலியால் அவதிபட்டு வந்துள்ளார், ஆகையால் தனது கால்வலியால் கொளத்தூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கட்டுப்போட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பயனின்றி பிரியா உயிரிழந்தார்.
இந்நிலையில் பிரியாவிற்கு அளிக்கபாடல் சிகிச்சை குறித்து மருத்துவத்துறை விளக்கமளித்துள்ளது அதில், பிரியாவின் காலில் மிக இறுக்கமாக கட்டு போடப்பட்டுள்ளது ஆகையால் மையோகுலோனஸ் என்ற திரவம் வெளியேற முடியாமல் ரத்தத்துடன் கலந்து சிறுநீரகத்தை செயலிழக்க செய்துள்ளது, மேலும் அதை தொடர்ந்து ஒரு ஒரு உறுப்பாக செயலிழந்த நிலையில் பிரியா உயிரிழந்தார். என்று மருத்துவத்துறை தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரியாவின் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் பிரியாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மருத்துவர்களின் கவன குறைவால் தான் பிரியா உயிரிழந்துள்ளதால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.