வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது..
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவண்ணாமலை சாலையனுர் பகுதியை சேர்ந்த பாரதி (23). இவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரேன் ஸ்ருதி அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. யு. சந்திரகலா அவர்கள் குற்றவாளியை ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார் அதன் பேரில் பாரதியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்