தனியார் ஏ.டி.எம் வங்கியில் கைவரிசை காட்டிய மர்ம நபர்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் பின்புறம் முத்தானந்தபுரம் தெருவில் தனியார் மருத்துவமனை முன்பு டிபிஎ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது.
இந்த மையத்தில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளார்.
அப்போது திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த மர்ம நபர் தனது முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி பகுதியில் தொடர்ச்சியாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த ஏடிஎம் மையம் அமைந்துள்ள பகுதி என்பது எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி.
அப்படி இருக்கும் பகுதியில் திருட்டு முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..