வேலூரில் ஓய்வு பெற்ற சிறைபணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்
வேலூரில் ஓய்வு பெற்ற சிறைபணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் உபயதுல்லா தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் ஓய்வு பெற்ற சிறைபணியாளர்கள் சங்கத்தின் கூட்டம், தலைவர் உபயதுல்லா தலைமையில் நடைபெற்றது.
இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் பங்கேற்றனர்.
ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் நலனை கருதி, அவர்களுக்கான அரங்கம் ஒன்றை தமிழக அரசு கட்டித்தர வேண்டும், ஊதிய முரண்பாடுகளை அரசு களைய வேண்டும், 20 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து சிறை பணியாளர்களுக்கும் முழு பென்ஷன் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.