“உயிரில் பூப்பறித்து காதலியும் நீ தான்” பல வருடங்களுக்கு பிறகு ஒரு சந்திப்பு..!
90ஸ் களின் கனவு கன்னியாக இருந்த “ரம்பா”, உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் “ரம்பா”.., என்னதான் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும்.., இவரின் “அழகிய லைலா இது இவளது ஸ்டைலா” என்ற பாடல் மூலம் நன்கு பிரபலமாக தொடங்கினார் என சொல்லலாம்.
அதேபோல் இளைய தளபதி விஜய், மற்றும் ரம்பா இணைந்து நடித்த படமான “மின்சார கண்ணா” மற்றும் “நினைத்தேன் வந்தாய்” போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..
இவர்களின் காம்போ மீண்டும் திரையில் பார்க்க முடியுமா என ரசிகர்கள் நினைக்க.. தற்போது சில போஸ்ட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது…
தற்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்ட நடிகை ரம்பா தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படதை இப்போது வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நடிகர் விஜய், ரம்பா மற்றும் அவருடைய கணவர் குழந்தைகளோடு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த ரம்பா “பல வருடங்களுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது விஜய் என்று வாழ்த்துக்களும் தெரிவித்திருக்கிறார்.”
அதோடு இந்த புகைப்படங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற ஹேஸ் டேக்கையும் ரம்பா பகிர்ந்திருக்கும் நிலையில் பலரும் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
ரம்பா மற்றும் விஜய் இருவரும் தனியாக எடுத்து செல்பி புகைப்படங்கள் மற்றும் ரம்பாவின் மகனை விஜய் கொஞ்சி தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் ரம்பாவின்
மகள்களோடு விஜய் எடுத்த புகைப்படங்கள் என்று பலவற்றை ரம்பா பகிர்ந்து இருக்கும் நிலையில் இதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..